Cinima News

தலைவாவில் விஜய்யின் புத்தம் புதிய ஆட்டம் 
                                                                                                                                                                         
விஜய் இயக்கத்தில், விஜய் நடித்து வரும் புதியபடமான தலைவாவில் இதுவரை விஜய் ஆடிடாத முற்றிலும் புதிய நடனத்தை ஆடி அசத்தியிருக்கிறார் நடிகர் விஜய். சினிமாவில் நடிப்போடு சேர்ந்து அசத்தலாக நடனம் ஆடும் கலைஞர்கள் ஒரு சிலரே. அந்த வகையில், நடிகர் விஜய்க்கு நடிப்போடு நடனமும் அசாதரணம். இதுவரை தான் நடித்த எல்லா படங்களிலும் அவர் நடனம் ஆடாமல் இருந்ததில்லை. குத்துப்பாட்டு, வெஸ்டர்ன் என்று எல்லா வகை நடனமும் ஆடும் வல்லமை படைத்தவர். தற்போது இவர் மதராஸப்பட்டினம் டைரக்டர் விஜய் இயக்கி வரும் தலைவா படத்தில் நடித்து வருகிறார். விஜய் ஜோடியாக அமலாபால், இந்தி நடிகை ராகினி ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் ஷூட்டிங் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. படத்தில் விஜய் டேப் டான்ஸ் எனும் நடனத்தை முதன்முறையாக ஆடி அசத்தியிருக்கிறாராம். சமீபத்தில் இந்த நடனத்தை ஆஸ்திரேலியாவில் வைத்து படமாக்கினார்கள். அப்போது விஜய்க்கு அந்த நடனம் பற்றி நடன கலைஞர்கள் பயிற்சி கொடுத்துள்ளனர். ஒன்றிரண்டு முறை பயிற்சி எடுத்துவிட்டு உடனே ஆடி அனைவரையும் ஆச்சரியப்படுத்திவிட்டாராம். படத்தில் சில நிமிடங்களே வரும் இந்த நடனம் நிச்சயமாக அனைவரையும் கவரும் என்கிறார்கள்.

மேலும் தலைவா படத்தில் விஜய், ஆஸ்திரேலியாவில் இருக்கும் நடன அமைப்பு ஒன்றுக்கு தலைவராக இருப்பதாகவும், இப்படத்தின் கதை நடனத்தை மையப்படுத்தி உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சும்மாவே தனது படங்களில் நடனத்தில் அசத்துபவர் விஜய், அதிலும் இப்படம் நடனம் சம்பந்தப்பட்டது என்றால் கேட்கவா வேண்டும், காலில் சலங்கை கட்டி ஆடிட மாட்டார்.